தெலுங்கானா மாநிலம் உதயமான தினம் இன்று கொண்டாடப்படுகிறது. பல ஆண்டுகளாக தனி மாநிலம் கோரி போராட்டம் நடந்த நிலையில், 2014ஆம் ஆண்டு ஜூன் மாதம் 2ஆம் தேதி ஆந்திராவில் இருந்து ஒரு பகுதி பிரிக்கப்பட்டு தெலுங்கானா என்ற மாநிலம் உருவாக்கப்பட்டது. அதன் 5ஆம் ஆண்டு தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தலைநகர் ஐதராபாத் நகரம் இரவில் வண்ணமயமாக ஜொலித்தது. சாலையோரங்களில் உள்ள கட்டடங்கள், பூங்காக்கள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தன.