வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்குவிப்பு வழக்கு தெலங்கானா போலீஸ் டிஎஸ்பி கைது வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக எழுந்த புகாரில், தெலங்கானா மாநில போலீஸ் டிஎஸ்பி பீம் ரெட்டி கைது செய்யப்பட்டார். அவரது வீடு உள்ளிட்ட 15 இடங்களில் ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் நடத்திய சோதனையில், சுமார் ரூ.300 கோடி மதிப்பிலான சொத்து ஆவணங்கள், 2 கிலோ தங்கம், 20 கிலோ வெள்ளிப் பொருட்கள் மற்றும் ரூ.6.40 லட்சம் ரொக்கத்தை பறிமுதல் செய்துள்ளனர். மேலும், பினாமி பெயர்களில் சொத்துகள் வாங்கியதற்கான விவரங்கள் இடம்பெற்றிருந்ததாகக் கூறப்படும் டைரியும் கைப்பற்றப்பட்டுள்ளது. உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பீம் ரெட்டி, பின்னர் கைது செய்யப்பட்டார்.