இந்தியா

பா.ஜ.க. வுக்கு எதிராக அணி திரட்டும் சந்திரசேகர ராவ்

பா.ஜ.க.வுக்கு எதிராக தேசிய அளவில் ஒரு அணியை கட்டமைக்க உள்ளதாக தெலங்கானா ராஷ்டிரிய சமீதி தலைவரும், தெலங்கானா முதலமைச்சருமான சந்திரசேகர ராவ் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி
இந்த தலைவர்களின் கூட்டம் அடுத்த மாதம் இரண்டாவது வாரத்தில் ஐதராபாத்தில் நடைபெறும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பா.ஜ.க. எதிர்ப்பு மனநிலையில் உள்ள மாநில கட்சிகளுடன் பேச உள்ளதாகவும் சந்திரசேகர ராவ் தெரிவித்துள்ளார். சரத்பவார், ஸ்டாலின், மாயாவதி, மம்தா, குமாரசாமி, அகிலேஷ் யாதவ், பிரகாஷ் சிங் பாதல், நவீன்பட் நாயக் ஆகியோரை இணைத்து இந்த கூட்டத்தை கூட்ட சந்திரசேகர ராவ் திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது. அதேநேரத்தில், இந்த கூட்டத்துக்கு காங்கிரஸ் கட்சி அழைப்பு விடுக்கப்படுமா என்பது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்பட்டதாக தெரியவில்லை. இந்த கூட்டத்தில் பா.ஜ.க. வுக்கு எதிரான நிலைப்பாட்டை உருவாக்குவது பற்றி செயல்திட்டம் உருவாக்க சந்திரசேகர ராவ் திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு