போதைப்பொருள் விற்ற ஆசிரியைகள் - திடுக்கிடும் தகவல் கேரள மாநிலம் கோழிக்கோட்டில், எம்.டி.எம்.ஏ. உயர்ரக போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டதாக 3 ஆசிரியைகள் கைது செய்யபப்ட்ட விவகாரத்தில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த வழக்கில் டெலிவரி பாய் ஒருவரை கைது செய்த போலீஸார், வங்கி க்யூஆர் கோடு மூலம் பணம் பெற்று போதைப்பொருள் விற்பனை செய்ததை கண்டுபிடித்துள்ளனர். மேலும் அவரது வங்கிக் கணக்கில் கடந்த ஆறு மாதத்தில் ஒரு கோடி ரூபாய் அளவுக்கு பணப் பரிவர்த்தனை நடைபெற்றதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.