இந்தியா

அதிதீவிர சூறாவளி புயலாக மாறியது டவ்தே; குஜராத்தில் கரையை கடக்கும் என எதிர்பார்ப்பு

அரபிக்கடலில் அதிதீவிர சூறாவளி புயலாக மாறியிருக்கும் டவ்தே புயல் குஜராத் கடற்கரையில் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தந்தி டிவி

அரபிக்கடலில் அதிதீவிர சூறாவளி புயலாக மாறியிருக்கும் டவ்தே புயல் குஜராத் கடற்கரையில் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள லட்சத்தீவு பகுதிகளில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று 15-ஆம் தேதி டவ்தே புயலாக மாறியது. வடக்கு திசை நோக்கி நகரத்தொடங்கிய புயல் கோவா கடல் பகுதியில் அதிதீவிர சூறாவளி புயலாக வலுப்பெற்றது. கோவாவிற்கு தென்மேற்கே 130 கிலோ மீட்டர் தொலைவிலும், மும்பைக்கு தெற்கே 450 கிலோ மீட்டர் தொலைவில் நிலைக்கொண்டிருந்த புயல், தொடர்ந்து வடமேற்கு திசை நோக்கி நகர்கிறது. அதே திசையில் பயணிக்கும் புயல் 17-ஆம் தேதி மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் இருந்து மேற்கே அரபிக்கடல் நிலை நிலைக்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே வேகத்தில் பயணிக்கும் புயல் 18-ஆம் தேதி அதிகாலையில் குஜராத் மாநிலம் போர்பந்தர் மற்றும் மகுவா இடையே கரையை கடக்க வாய்ப்பு உள்ளது என்றும் எதிர்பார்க்கப்படுகிறது

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்