#chhattisgarh | #husbandwife |#thanthitv சத்தீஸ்கரில் மனைவியின் நடத்தையில் நடந்தேகம் அடைந்த கணவன், மனைவியை கொடூரமாக தாக்கி, மொட்டையடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சத்தீஸ்கர் மாநிலம் கோரியா பகுதியை சேர்ந்த ஜிதேந்திர காசியா என்பவருக்கு தனது மனைவியின் நடத்தையில் சந்தேகம் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், ஜிதேந்திரா தனது மனைவியைக் கட்டிப்போட்டு முகத்தில் கரியைப் பூசி, தனது சிறுநீரைக் குடிக்க வற்புறுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், ஜிதேந்திர காசியா தலைமறைவாகியுள்ளார். அவரை ஜார்கண்ட் போலீசார் தேடி வருகின்றனர்.