இந்தியா

சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை விவகாரம் - சிபிஐ விசாரணைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை விவகாரத்தை, சிபிஐ விசாரணைக்கு மாற்ற உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தந்தி டிவி

சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் தோழி ரியா சக்கரவர்த்தி பிகார் மாநிலம் பாட்னாவில் தற்கொலை தொடர்பாக பதிவு செய்யப்பட்டுள்ள முதல் தகவல் அறிக்கையை மும்பைக்கு மாற்றக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதி ரிஷிகேஷ் ராய் தலைமையிலான அமர்வு முன் விசாரணை நடைபெற்றது. விசாரணையின் முடிவில், சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை விவகாரத்தை, சிபிஐ விசாரணைக்கு மாற்ற உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக அனைத்து ஆவணங்களையும் ஆதாரங்களையும் சிபிஐக்கு அளிக்க மும்பை போலீசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது சட்டப்பூர்வமானது என்றும் சுஷாந்த் சிங்கின் தற்கொலை விவகாரத்தை சிபிஐ விசாரிக்க கோர பீகார் அரசுக்கு அதிகாரம் உள்ளது என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்