இந்தியா

``'கடவுளே ஒரு வழி சொல்லு'-னு வேண்டினேன்..'' அயோத்தி தீர்ப்பு... ஓப்பனாக சொன்ன தலைமை நீதிபதி

தந்தி டிவி

அயோத்தி ராம ஜென்மபூமி பிரச்னைக்கு தீர்வு காண கடவுளிடம் வேண்டியதாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தெரிவித்துள்ளார்.

மகாராஷ்ட்ராவின் புனே மாவட்ட கானஹேர்சரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், சில நேரங்களில் சில வழக்குகளுக்கு தீர்வு தர முடியாத சூழல் ஏற்படும் என்றார். அதில் ஒன்றான அயோத்தி ராம ஜென்மபூமி பிரச்னை தொடர்பான வழக்கு விசாரணை தான் இடம் பெற்றிருந்த அமர்வில் மூன்று மாதங்கள் நடைபெற்று தான கூறினார். அப்போது, இந்த விவகாரத்திற்கு தீர்வு தர வேண்டுமென கடவுளிடம் வேண்டிக் கொண்டதாக தெரிவித்தார். அயோத்தி பாபர் மசூதி,ராம ஜென்மபூமி பிரச்னை தொடர்பான வழக்கில், கடந்த 2019 நவம்பரில் தீர்ப்பளித்த ஐந்து நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வில், தற்போதைய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் இடம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்