உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்துக்கு எதிராக சமூக வலைதளத்தில் அவதூறு வீடியோ பதிவிட்டதாக கூறி கைது செய்யப்பட்ட பத்திரிகையாளர் பிரசாந்த் கனோஜியாவை உடனடியாக விடுதலை செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பிரசாந்த் கனோஜியா கைதுக்கு கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், அவரது செயலை ஆதரிக்கவில்லை என்றும் , அதற்காக பிரசாந்த் கனோஜியாவை சிறையில் அடைக்க தேவையில்லை என்றும் தெரிவித்தனர். பிரசாந்த் கனோஜியா கைது செய்யப்பட்டதை எதிர்த்து அவரது மனைவி தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.