Nirbhaya Verdict 
இந்தியா

நிர்பயா பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகளின் தூக்கு தண்டனையை உறுதி செய்தது உச்சநீதிமன்றம்

நிர்பயா வழக்கு : தண்டனையை குறைக்கக்கோரி குற்றவாளிகள் வினய், பவன், முகேஷ் ஆகியோர் தொடர்ந்த மனு தள்ளுபடி

தந்தி டிவி

டெல்லி பேருந்தில் நிர்பயா என்ற பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் தூக்கு தண்டனையை உறுதி செய்தது உச்சநீதிமன்றம்

* தண்டனையை குறைக்கக்கோரி குற்றவாளிகள் வினய், பவன், முகேஷ் ஆகியோர் தொடர்ந்த மனு தள்ளுபடி

* இது மிக கொடூர குற்றம் என்பதால் தூக்கு தண்டனையை குறைக்க முடியாது - உச்சநீதிமன்றம்..

கடந்த 2016 ஆம் ஆண்டு, டெல்லியில், ஓடும் பேருந்தில் மருத்துவ மாணவி நிர்பயா, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டது நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

இந்த வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட குற்றவாளிகளில் ராம்சிங் என்பவர் சிறையிலேயே தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்தார்.

மற்றொரு குற்றவாளி சிறார் என்பதால் விடுதலை செய்யப்பட்டார். மற்ற 4 குற்றவாளிகளுக்கு கீழமை நீதிமன்றம் தூக்கு தண்டனையை உத்தரவிட அதனை உச்சநீதிமன்றமும் உறுதி செய்தது.

இந்நிலையில் தூக்கு தண்டனையை மறு ஆய்வு செய்யுமாறு வினய், பவன், முகேஷ் ஆகிய 3 பேரும், மனுத்தாக்கல் செய்தனர். இவர்களில் அக்‌ஷய் என்ற குற்றவாளி மறு ஆய்வு மனு தாக்கல் செய்யவில்லை.

3 குற்றவாளிகளும் தாக்கல் செய்த மனு, இன்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, மறு ஆய்வு மனுக்களை தள்ளுபடி செய்த நீதிபதிகள், தூக்கு தண்டனையை குறைப்பதற்கான எந்த அவசியமும் இல்லை என உத்தரவிட்டனர். இந்த உத்தரவின் மூலம், 4 பேருக்கு தூக்கு தண்டனை உறுதியாகியுள்ளது.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி