புலம்பெயர் தொழிலாளர்கள் அனைவருக்கும் குறைந்தபட்ச சம்பளத்தை வழங்க உத்தரவிடக்கோரிய மனு, உச்சநீதிமன்றத்தில் திங்கள்கிழமை மீண்டும் விசாரணைக்கு வரவுள்ளது. இது தொடர்பாக ஹர்ஷ் மந்தர் என்பவர் தாக்கல் செய்த மனுவில், ஊரடங்கு உத்தரவால் 40 கோடி இந்திய தொழிலாளர்கள் ஏழ்மை நிலைமைக்கு தள்ளப்படுவார்கள் என பன்னாட்டு தொழிலாளர் அமைப்பு கணித்துள்ளதாக கூறியுள்ளார். மனுவை விசாரித்த நீதிமன்றம், ஆதாரத்தை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டு, திங்கள் கிழமையன்று மீண்டும் விசாரிப்பதாக தெரிவித்தது.