இந்தியா

சபரிமலை வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்

சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிப்பதில் எந்த ஆட்சேபமும் இல்லை என தேவசம்போர்டு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

தந்தி டிவி

* சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்ற தீர்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட 54 மனுக்கள் மீதான விசாரணை, அரசியல் சாசன அமர்வு முன்பு நடைபெற்றது.

* இதில், நாயர் அமைப்பு சார்பில் முதலில் வாதத்தை தொடங்கிய மூத்த வழக்கறிஞர் பராசரன், சபரிமலை கோயில் விவகாரம் தீண்டாமை கிடையாது என்றும், அது பல ஆண்டுகளாக கடைபிடிக்கப்பட்டு வரும் மரபு மற்றும் மத நம்பிக்கை என்றும் கூறினார்.

* தேவசம் போர்டு சார்பாக வாதிட்டபோது, சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என, உச்சநீதிமன்றத்தில் ​தெரிவிக்கப்பட்டது.

* இதனையடுத்து, சபரிமலை வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் உச்சநீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது.

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு

Chennai Corporation New Rules | சென்னையில் அமலுக்கு வந்தது புதிய ரூல்ஸ்

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு