இந்தியா

விண்வெளியில் விவசாயத்தை தொடங்கிய சுபான்ஷு சுக்லா

தந்தி டிவி

ஆக்ஸியம் 4 திட்டத்தின் மூலம் சர்வதேச விண்வெளி மையம் சென்றுள்ள சுபான்ஷு சுக்லா, விண்வெளி விவசாயத்தை தொடங்கியுள்ளார்.

கடந்த 25ஆம் தேதி விண்வெளிக்கு புறப்பட்டு, 26 ஆம் தேதி சர்வதேச விண்வெளி மையத்தை அடைந்த சுபான்சு சுக்லா, கடந்த 6 நாட்களாக விண்வெளியில் பல்வேறு விதமான பணிகளை மேற்கொண்டு வந்தார்.கடந்த 27ஆம் தேதி நுண்ணீர்ப்பு விசை மண்டலம் குறித்தும், அதனால் விண்வெளியில் மனிதர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.

28ஆம் தேதி முதல், ஈர்ப்பு விசையின் தாக்கம் இல்லாத விண்வெளியில், விதை எப்படி முளைக்கும்? அங்கு வளரும் தாவரங்களின் தன்மை குறித்து ஆய்வுகளை செய்து வருகிறார்.இதற்காக, தன்னுடன் எடுத்துச் சென்ற வெந்தயம் மற்றும் பயிறு விதைகளை சுபான்ஷு சுக்லா வளர்க்கத் தொடங்கியுள்ளார். பூமி திரும்பும் போது, விண்வெளியின் தாவரங்களின் வளர்ச்சி மற்றும் பூமியின் ஈர்ப்பு விசையில் வளரும் தாவர வளர்ச்சியோடு ஒப்பிட்டு, ஆய்வறிக்கை தயார் செய்ய உள்ளார். 

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்