இந்தியா

20-க்கும் மேற்பட்ட தெருநாய்கள் சுட்டுக்கொலை...நள்ளிரவில் காரில் வந்த முகமூடி அணிந்த மர்ம நபர்கள் வெறிச்செயல்

தந்தி டிவி

தெலங்கானா மாநிலத்தில், 20-க்கும் மேற்பட்ட நாய்களை, முகமூடி அணிந்த மர்ம கும்பல் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மெகபூப்நகர் மாவட்டத்தில் உள்ள பொன்னக்கல் கிராமத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசாரும், விலங்குகள் நல அமைப்பினரும், உயிரிழந்த நாய்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். காயமடைந்த நாய்களை மீட்டு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். விசாரணையில், நள்ளிரவில், காரில் வந்து இறங்கிய முகமூடி அணிந்த மர்ம நபர்கள் சிலர், திடீரென தெருநாய்களை துப்பாக்கியால் சுட்டதாகவும், இதில், 20-க்கும் மேற்பட்ட நாய்கள் உயிரிழந்ததும் தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்