இந்தியா

தெரு நாய்களுக்கு கருத்தடை உத்தரவு..வலைக்குள் கட்டி வண்டியில் ஏற்றிய ஊழியர்கள்.. பரபரப்பான புதுச்சேரி

தந்தி டிவி

புதுச்சேரியில், தெரு நாய்களை அனுமதியின்றி பிடித்துச் செல்வதாக கூறி, சமூக ஆர்வலர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பானது...

புதுச்சேரியில், தெரு நாய்களின் தொல்லை அதிகமாக இருப்பதாகவும், அவை பொதுமக்களை அச்சுறுத்தி வருவதாகவும் நகராட்சி நிர்வாகத்திற்கு புகார் அளிக்கப்பட்டது. இதனையடுத்து தெருக்களில் சுற்றித்திரியும் நாய்களை பிடித்து, அவற்றுக்கு கருத்தடை செய்து மீண்டும் பிடித்த இடத்திலேயே விட உழவர்கரை நகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டிருந்தது. இதற்கு விலங்குகள் நல ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனிடையே, கடற்கரை சாலையில் சுற்றித் திரியும் தெரு நாய்களை நகராட்சி ஊழியர்கள் பிடித்துக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த சமூக ஆர்வலகர்கள், நகராட்சி வாகனத்தின் சாவியை எடுத்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து நகராட்சி ஊழியர்களுடன் அவர்கள் வாக்குவாதத்திலும் ஈடுபட்டதால் பரபரப்பானது. தகவல் அறிந்து வந்த போலீசார், சமூக ஆர்வலர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்