இந்தியா

தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் அத்துமீறல் - மத்திய அரசு வேடிக்கை பார்ப்பதாகக் குற்றச்சாட்டு

தந்தி டிவி

தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் அத்துமீறலை மத்திய அரசு வேடிக்கை பார்ப்பதாகக் கூறி திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி தலைமையில் திமுகவினர் ராமேஸ்வரத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். மத்திய அரசு தமிழக மீனவர்கள் பிரச்சினையை மாற்றான் தாய் மனப்பான்மையோடு கையாண்டு வருவதாக திமுகவினர் குற்றம் சாட்டி வரும் நிலையில், ராமேஸ்வரம் பேருந்து நிலையம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது... இதில் ராமநாதபுரம், தூத்துக்குடி, நாகை, குமரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து மீனவர்கள் மற்றும் திமுக தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Chennai | TN Rains | நெருங்கும் நவம்பர், டிசம்பர்.. சென்னையில் குறிக்கப்பட்ட 267 ஸ்பாட்ஸ்

BREAKING || தமிழகத்தையே பரபரப்பாக்கிய ஆகாஷ் மரண வழக்கு - திடீர் திருப்பமாக வெளியான பகீர் தகவல்

இன்று முதல் விலை உயர்வு அமல்.. தமிழகத்திற்கே அதிர்ச்சி செய்தி

MK Stalin | தான் வெற்றி பெற்றதாக அறிவிக்க கோரிய ஸ்டாலின் - ஐகோர்ட் எடுத்த முடிவு

Minister Prabhu | "இது எவ்ளோ பெரிய ஓட்டை" - சிரித்துபடி சொன்ன அமைச்சர் பிரபு