இந்தியா

சோலார் முறைகேடு விவகாரத்தில், காங். மாநிலத் தலைவரின் பேச்சு தவறானது- அமைச்சர் பதிலடி

சோலார் முறைகேடு விவகாரப் பெண்ணை மீண்டும் மீண்டும் யாரும் நம்பமாட்டார்கள் என கேரள மாநில காங்கிரஸ் தலைவர் முல்லப்பள்ளி ராமசந்திரன் கூறியுள்ளார்.

தந்தி டிவி
சோலார் முறைகேடு விவகாரப் பெண்ணை வைத்து எங்களை முதலமைச்சர் பினராயி விஜயன் குறி வைத்தால், அதை மக்கள் நம்ப மாட்டார்கள் என்று கூறியுள்ள ராமச்சந்திரன், தான் பலாத்காரம் செய்யப்பட்டேன் என ஒருமுறை, ஒரு பெண் கூறினால், புரிந்துகொள்ள முடியும் என்றும், ஆனால், பலரும் தன்னை பலாத்காரம் செய்ததாக அந்தப் பெண் கூறுகிறார் என்றும் சாடினார். சுயமரியாதை உடைய எந்தப் பெண்ணும் அவ்வாறு கூறமாட்டார் என்ற முல்லப்பள்ளி ராமச்சந்திரன், மீண்டும் அதுபோல் நடக்காமல், அந்தப் பெண் பார்ப்பார் என்றார். இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள கேரள பெண் அமைச்சர் கே.கே. சைலஜா, பலாத்காரத்துக்கு இரையாவதை எந்தப் பெண்ணும் விரும்புவதில்லை என்றும், தவறான கருத்தை மாநில காங்கிரஸ் தலைவர் ராமச்சந்திரன் பதிவு செய்துள்ளதாகவும் சாடியுள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்