சூரிய கிரகணம் காரணமாக, சபரிமலை ஐயப்பன் கோயில் நடை டிசம்பர் மாதம் 26ஆம் தேதி 4 மணி நேரம் அடைக்கப்படும் என திருவிதாங்கூர் தேவஸ்தான வாரியம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், அன்றைய தினம் காலை 7 மணி 30 நிமிடம் முதல் 11 மணி 30 நிமிடம் வரை கோவில் நடை அடைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சூரிய கிரகணத்துக்கு முன்பாகவே, நெய் அபிஷேகம் உள்ளிட்ட தினசரி பூஜைகள் நடந்த பிறகு கோயில் நடை மூடப்படும் என கூறப்பட்டுள்ளது.