இந்தியா

ஆன்லைன் மூலம் நடக்கும் நூதன திருட்டு...

நீங்கள் பயன்படுத்தும் சமூக வலைத்தளங்களை கொண்டே உங்கள் பணத்தை கொள்ளையடிக்கும் கும்பல் இருக்கிறது. திடுக்கிட வைக்கும் இந்த திருட்டில் இருந்து உங்களை பாதுகாத்துக் கொள்ளும் வழிமுறைகளை விளக்குகிறது இந்த தொகுப்பு...

தந்தி டிவி

வங்கிக் கணக்கு விபரங்களை கேட்டு வரும் செல்போன் அழைப்புகளை நம்பி தங்கள் கணக்கில் இருந்த பணத்தை இழந்தவர்கள் ஏராளம். விதவிதமான சடிகளால் பணத்தை இழந்து வரும் நிலையில் இப்போது அதிலும் டெக்னாலஜியை பயன்படுத்தி இருக்கிறது மோசடி கும்பல்... இன்ஸ்டாகிராம், பேஸ்புக், டிக் டாக் போன்ற சமூக வலைத்தளங்களை பயன்படுத்துபவரா நீங்கள்? அப்படி என்றால் உங்கள் வங்கிக் கணக்கும் நிச்சயம் பாதிக்கப்படும் அபாயம் இருக்கிறதாம். இந்த சமூக வலைத்தள பக்கங்களில் நீங்கள் பதிவேற்றும் படங்கள், அதன் பின்னணி இவற்றை கண்டறிந்து ஒரு கும்பல் உங்களை குறிவைத்து திருடிக் கொண்டிருப்பதாக புகார் எழுந்துள்ளது. ஆன்லைன் பரிவர்த்தனைகள் நடந்த போதிலும் கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் இந்தியாவில் 110 கோடி ரூபாய் பணம் திருடு போய் இருப்பதாக புள்ளி விபரம் கூறுகிறது. இதற்கெல்லாம் சமூக வலைத்தளங்களும் ஒரு காரணம் என்கிறார் பெங்களூரை சேர்ந்த இணைய பாதுகாப்பு நிபுணர் ஆண்டனி... ஆன்லைன் திருட்டு மூலம் பணத்தை இழந்தவர்கள் மீண்டும் தங்கள் பணத்தை பெற முடியாத நிலையும் இருந்து வந்தது. ஆனால் இழந்த பணத்தை மீண்டும் பெறுவதற்கான வழிமுறைகளும் இப்போது உள்ளது. அதே நேரம் வங்கிக் கணக்கில் இருந்து பணத்தை பாதுகாப்பாக வைத்துக் கொள்வதும் இங்கே அவசியமாகிறது. நாம் பயன்படுத்தும் செல்போனில் தேவையற்ற செயலிகளை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்பதும் இங்கு கவனிக்க வேண்டியது என்கிறார் ஆண்டனி ஆன்லைன் திருட்டுகளை தவிர்க்க பல்வேறு தனியார் அமைப்புகளும், சைபர் கிரைம் நிபுணர்களும் இருந்தாலும் கூட, நம்முடைய பங்களிப்பும் இங்கு அவசியமான ஒன்று. உங்கள் செல்போனை முறையாக பயன்படுத்துவது கூட இதுபோன்ற குற்றங்களில் இருந்து நிச்சயம் உங்களை பாதுகாக்கும்...

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி