இந்தியாவின் 'இசைக்குயில்' என வர்ணிக்கப்படும் பாடகி லதா மங்கேஷ்கர் சுவாச பிரச்சினை காரணமாக நேற்று முன்தினம் மும்பை பிரீச்கேண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 90 வயதான அவருக்கு, மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வரும் நிலையில், உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.