சிக்கிம் மாநிலத்தின் 50-வது ஆண்டு பொன்விழா கொண்டாட்டங்களில் பங்கேற்கச் சென்ற பிரதமர் மோடிக்கு, காங்டாக்கில் வழிநெடுகிலும் மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இரண்டு நாள் பயணமாக சிக்கிம் சென்றுள்ள பிரதமர், 4,000 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணிக்கவுள்ளார். இந்த நிலையில் , காங்டாக் நகரில் பிரதமர் மோடி நடத்திய பிரம்மாண்ட ரோடுஷோவில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு மலர் தூவி வரவேற்பு அளித்தனர்.