ராகுல் காந்தி பயணித்த விமானம் தரையிறங்குவதில் ஏற்பட்ட சிக்கல் தனது சொந்த தொகுதியான ரேபரேலியில் நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்பதற்காக டெல்லியிலிருந்து லக்னோ சென்ற மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி பயணித்த ஏர் இந்தியா விமானம் தரையிறங்குவதில் சிறிய சிக்கல் ஏற்பட்டது. மோசமான வானிலை மற்றும் பலத்த காற்று காரணமாக விமானம் நிலைதடுமாறியதை அடுத்து, பாதுகாப்பு கருதி விமானி உடனடியாகத் தரையிறக்குவதைத் தவிர்த்து 'கோ-அரவுண்ட்' முறையில் மீண்டும் உயரப் பறக்கச் செய்தார்.
பின்னர் 10 நிமிடங்களுக்குப் பிறகு விமானம் பாதுகாப்பாகத் தரையிறக்கப்பட்டது.
#rahulgandhi #airindia #congress #thanthitv