இந்தியா

தரையிறங்கும்போது விழுந்து நொறுங்கிய பிரச்சார ஹெலிகாப்டர்..தப்பிய அரசியல் பிரமுகர்-பரபரப்பு காட்சிகள்

தந்தி டிவி

மகாராஷ்டிர மாநிலம் மஹத் மாவட்டத்தில் ஹெலிகாப்டர் ஒன்று கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. சிவசேனா கட்சியின் துணைத்தலைவர் சுஷ்மா அந்தாரே, தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்வதற்காக ராய்காடு பகுதியில் இருந்து ஹெலிகாப்டரில் செல்ல திட்டமிட்டிருந்தார். அவரை ஏற்றிக் கொண்டு செல்வதற்காக, தனியார் ஹெலிகாப்டர் ஒன்று மைதானத்தில் தரையிறங்க முயன்றது. அப்போது, கட்டுப்பாட்டை இழந்த ஹெலிகாப்டர் திடீரென கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. ஹெலிகாப்டரை இயக்கிய 2 பைலட்டுகளும் நல்வாய்ப்பாக உயிர்த்தப்பினர். ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகும் பரபரப்பான காட்சிகள் வெளியாகியுள்ளன.

Minister Sengottaiyan | TVK | அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து வழக்கு

Trichy East | CM Vijay | திருச்சி கிழக்கில்.. திடீர் திருப்பம் இனிகோ இருதயராஜ் பரபரப்பு வழக்கு

Drunk And Drive | மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள்..மலைக்க வைக்கும் டேட்டா

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு