இந்தியா

8 - ஆம் வகுப்பு மாணவியை நீண்ட நாட்களாக வற்புறுத்தி வந்த ஆசிரியருக்கு மொட்டை அடித்து ஊர்வலம்

8 - ஆம் வகுப்பு மாணவியை நீண்ட நாட்களாக வற்புறுத்தி வந்த ஆசிரியருக்கு மொட்டை அடித்து ஊர்வலம்

தந்தி டிவி

8 - ஆம் வகுப்பு மாணவியை நீண்ட நாட்களாக வற்புறுத்தி வந்த ஆசிரியருக்கு மொட்டை அடித்து ஊர்வலம்

மத்திய பிரதேசத்தில் பள்ளி மாணவிக்கு காதல் கடிதம் கொடுத்த ஆசிரியரை கிராமவாசிகள் மொட்டை அடித்து, முகத்தில் கரி பூசி, ஊர்வலமாக அழைத்து சென்றனர்.மத்திய பிரதேச மாநிலம் இந்தூர் நகரில் மண்பூர் என்ற கிராமத்தில் உள்ள பள்ளி ஒன்றில் படித்து வரும் 8ம் வகுப்பு மாணவிக்கு ஆசிரியர் ஒருவர் காதல் கடிதம் கொடுத்து உள்ளார். அவரை பின் தொடர்ந்து சென்று துன்புறுத்தியும் வந்துள்ளார். காதலை ஏற்க மறுத்து விட்டால் குடும்பத்தினருக்கு ஆபத்து ஏற்படும் என மிரட்டியும் உள்ளார். இது பற்றி தெரிய வந்த கிராமவாசிகள் ஆத்திரம் அடைந்துள்ளனர். அவர்கள் அந்த ஆசிரியருக்கு மொட்டை அடித்து, முகத்தில் கரியை பூசியுள்ளனர். இதன்பின்னர் அவரை தெரு வழியே ஊர்வலமாக அழைத்து சென்றுள்ளனர்.

இந்த சம்பவம் பற்றி அறிந்த போலீசார் 10 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த வழக்கில் ஆசிரியரை கைது செய்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்