இந்தியா

அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்த ஷப்னா சுரேஷ்

தந்தி டிவி

கேரளா மாநிலம திருவனந்தபுரத்தில் உள்ள அமீரக தூதரக பார்சலில் தங்கம் கடத்திய வழக்கில் கைது செய்யப்பட்டவர் ஷப்னா சுரேஷ். இவர் அடிக்கடி கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு எதிராக பல்வேறு புகார்களை கூறி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார். இந்நிலையில், தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த போது மீண்டும் குற்றச்சாட்டுகளை அடுக்கியுள்ளார். பினராயி விஜயன் பினாமிகளின் பெயரில் வளைகுடா நாடுகளில் பல தொழில்கள் நடத்துவதாக கூறியுள்ளார். குறிப்பாக ஐக்கிய அரபு அமீரகம், சார்ஜா, அஜ்மான் ஆகிய நாடுகளில் தான் அதிக அளவில் தொழில்கள் நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளார். இதனால்தான் அடிக்கடி வளைகுடா நாடுகளுக்கு பினராயி விஜயன் பயணம் செய்து வருவதாகவும், விரைவில் பினராயி விஜயன் தொடர்பான பல தகவல்களை வெளியிடுவேன் என்றும் ஸ்வப்னா சுரேஷ் கூறியுள்ளார். 

Vinayagar Chathurthi | விடிந்தால் விநாயகர் சதுர்த்தி..எகிறிய பூஜை பொருட்களின் விலை

Brics | Xi Jinping | பிரிக்ஸ் மாநாட்டில் பேசி முடித்ததும் சீன அதிபர் எடுத்த முடிவு

Rahul Gandhi | ராகுலுடன் காலை உணவு அருந்திய உலக தலைவர் - பிரிக்ஸ் மாநாட்டுக்கு நடுவே சுவாரஸ்யம்

Brics Summit PM Modi Speech | Xi Jinping| Putin |மாஸாக பேசிய PM மோடி..உன்னிப்பாக கவனித்த ஜிஜின் பிங்

BRICS Summit 2026 | India | Russia | China | பிரிக்ஸ் மாநாட்டில் இன்றைய அதிரடி திருப்பம்