#tirupatitemple #srivilliputturaanadal
திருப்பதி தேவஸ்தானம் சார்பில் ஆண்டாளுக்கு பட்டு வஸ்திரம் திருப்பதி தேவஸ்தானம் சார்பில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாளுக்கு பட்டு வஸ்திரம் சாற்றப்பட்டது. ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் இருந்து, திருப்பதி திருமலை புரட்டாசி பிரம்மோற்சவ விழாவில் கருட சேவையின்போது மலையப்ப சுவாமிக்கு அணிவிப்பதற்காக ஆண்டாள் சூடிக் களைந்த மாலை, பட்டு வஸ்திரம் உள்ளிட்ட மங்களப் பொருட்கள் ஆண்டுதோறும் அனுப்பி வைக்கப்படுகின்றன. அதற்கு பதிலாக திருப்பதி தேவஸ்தானம் சார்பில் ஆண்டாளுக்கு பட்டு வஸ்திரம் மற்றும் மங்களப் பொருட்கள் அனுப்பி வைக்கப்படுவது வழக்கமாக உள்ளது. அந்த வகையில், இந்த ஆண்டு திருப்பதியில் இருந்து அனுப்பி வைக்கப்பட்ட பட்டு வஸ்திரம் மற்றும் மங்களப் பொருட்கள் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் நிர்வாகத்தால் பெற்றுக்கொள்ளப்பட்டு, ஆண்டாளுக்கு அணிவிக்கப்பட்டது. தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.