இந்தியா

அமர்நாத் யாத்திரைக்கு பலத்த பாதுகாப்பு - ஜம்முவில் இருந்து முதல் குழு புறப்பட்டது

அமர்நாத் யாத்திரையை முன்னிட்டு காஷ்மீர் மாநிலத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் இருப்பதால் துப்பாக்கி ஏந்திய ராணுவ வீரர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

தந்தி டிவி

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் அமர்நாத் கோவில் உள்ளது. அங்கிருக்கும் பனி லிங்கத்தை தரிசிக்க ஆண்டுதோறும் லட்சக்கணக்கான மக்கள் யாத்திரை செல்கின்றனர். இந்த ஆண்டுக்கான அமர்நாத் யாத்திரை நாளை தொடங்க உள்ள நிலையில், ஜம்மு மலையடிவாரத்தில் உள்ள ராணுவ முகாமில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் ராணுவ தளபதி பிபின் ராவத் மற்றும் பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆய்வு செய்தனர். இந்நிலையில், இன்று அதிகாலை ஜம்மு மலையடிவார ராணுவ முகாமில் இருந்து, அமர்நாத் யாத்திரை செல்லும் முதல் குழு புறப்பட்டது. காஷ்மீர் மாநில தலைமை செயலாளர் சுப்பிரமணியம், ஆளுநரின் ஆலோசகர்கள் வியாஸ் மற்றும் விஜய குமார் ஆகியோர், அமர்நாத் யாத்திரை குழுவை கொடி அசைத்து வழியனுப்பிவைத்தனர்.

கடந்த ஆண்டு அமர்நாத் யாத்திரை பக்தர்கள் சென்ற பேருந்தை குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில், 7 பேர் உயிரிழந்தனர். அதுபோன்ற அசம்பாவித சம்பவம் இந்த ஆண்டு நடைபெறாமல் தடுக்க ஜம்மு, ஸ்ரீநகர் உள்ளிட்ட பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அமர்நாத் யாத்திரை செல்லும் வழி நெடுகிலும் நவீன ரக துப்பாக்கி ஏந்திய ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். டால் எரி மற்றும் சங்கராச்சாரியா கோவில் பகுதிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. எல்லைப் பாதுகாப்பு படை வீரர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி