தமிழகத்திற்குள் தீவிரவாதிகள் ஊடுருவி உள்ளதாக உளவுத்துறை விடுத்த எச்சரிக்கையை தொடர்ந்து ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா ராக்கெட் ஏவு தளத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. தீவிரவாதிகள் நாச வேலைகளில் ஈடுபடாமல் தடுக்க அங்கு மத்திய தொழில் பாதுகாப்பு படையிருடன் இணைந்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் ஸ்ரீஹரிகோட்டாவை ஒட்டியுள்ள கடல்பகுதியில் கடலோர காவல் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.