இந்தியா

கடலுக்குள் சவாரி அப்படியே கவிழ்ந்த படகு - மூச்சு முட்டி தத்தளித்த 8 பேர்... திக் திக் நொடிகள்

தந்தி டிவி

புதுச்சேரியில் கடலில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் அதிஷ்டவசமாக அதிலிருந்த சுற்றுலா பயணிகள் உயிர்தப்பினர்.

புதுச்சேரி வம்பாகீரப்பாளையம் முகத்துவாரத்தில் இருந்து ஏராளமான படகுகள், அரசின் அனுமதியின்றி சுற்றுலாப் படகுகளாக இயக்கப்பட்டு வருகின்றன. விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமை, மணிகண்டன் என்பவருக்கு சொந்தமான மீன்பிடி படகில் 8 சுற்றுலா பயனிகள் கடலுக்குள் சவாரி சென்றனர். அவர்கள் மீண்டும் திரும்பும் போது கரையை தொடும் தூரத்தில் திடீரென படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் படகில் பயணம் செய்த 8 பேரும் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய நிலையில், சென்னையை சேர்ந்த ஹரிணி, பெங்களூரைச் சேர்ந்த புருஷோத்தமன் ஆகிய இருவருக்கும் கைகளில் லேசாக காயம் ஏற்பட்டது. தகவலறிந்து வந்த ஒதியஞ்சாலை மற்றும் கடலோர காவல் படை போலீசார், காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததுடன், படகு ஓட்டிய சரண், படகு உரிமையாளர் மணிகண்டன் ஆகியோரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு