இந்தியா

கேரளாவில் 8-ம் வகுப்புக்கு இன்று பள்ளிகள் திறப்பு

கேரளாவில் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. 9 மற்றும் 11 ம் வகுப்புகளுக்கு வருகிற 15-ம் தேதி பள்ளிகளைத் திறக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

தந்தி டிவி

கேரளாவில் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. 9 மற்றும் 11 ம் வகுப்புகளுக்கு வருகிற 15-ம் தேதி பள்ளிகளைத் திறக்க திட்டமிடப்பட்டு உள்ளது. கேரளாவில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதன் காரணமாக, படிப்படியாக பள்ளிகள் திறக்கப்பட்டு வருகிறது. கடந்த 1-ம் தேதி, ஒன்று முதல் ஏழாம் வகுப்பு மாணவர்களுக்கும், 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கும் அங்கு பள்ளிகள் திறக்கப்பட்டன. இந்நிலையில், 8, 9 மற்றும் 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகளை திறக்க அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.அதன்படி இன்று முதல் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கும், வருகிற 15-ம் தேதி முதல் 9 மற்றும் 11-ம் வகுப்பு மாணவர்களுக்கும் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. இதற்கான ஏற்பாடுகளை மாநில கல்வித்துறை அதிகாரிகளும், சுகாதார பணியாளர்களும் மேற்கொண்டு வருகின்றனர்.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி