இந்தியா

ஆந்திராவில் பள்ளி, கல்லூரிகள் திறப்பு

ஆந்திராவில் பல்வேறு கட்டுப்பாடுகளுடன், பள்ளி, கல்லூரிகள் இன்று திறக்கப்பட்டுள்ளது...

தந்தி டிவி
ஆந்திராவில் 8 மாதங்களுக்கு பிறகு இன்று பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. முதல்கட்டமாக 9 முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரையிலான வகுப்புகள் இன்று தொடங்கியுள்ளது. பள்ளி முழுவதும் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட்டு மாணவர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். முக்கியமாக முகக்கவசம் மற்றும் உடல் வெப்பநிலையை பரிசோதித்த பின்னரே வகுப்பறைக்குள் செல்ல அனுமதி அளிக்கப்படுகிறது. அதேபோல் கல்லூரிகளும் குறைந்த அளவு மாணவர்களை கொண்டு பாடம் நடத்த அனுமதிக்கப்பட்டுள்ளது. மேலும் 3 வாரங்களுக்கு பிறகு 6 முதல் 8 வகுப்பு வரையிலான நடுநிலைப் பள்ளிகளும், டிசம்பர் 14ஆம் தேதி முதல் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள அனைத்து பள்ளிகளும் திறக்கப்படும் என்றும் ஆந்திர அரசு அறிவித்துள்ளது.

TN Governor | TVK | Vijay | ஆளுநர் கேட்ட விவரங்களை அனுப்பியது தவெக

BREAKING || TVK | ADMK | விஜய்க்கு அதிமுக நிபந்தனையற்ற ஆதரவு?

TVK | Congress | Vijay | காங்., தரப்பில் இருந்து அதிகாரபூர்வ அறிவிப்பு

TVK Vijay | "கட்சி ஆரம்பித்ததில் இருந்தே.." - ரிசல்ட்டுக்கு பின் விஜய்யின் முதல் REACTION

BREAKING || "ஈபிஎஸ் - விஜய் பேச்சுவார்த்தை" - லீமா ரோஸ் பேட்டி