இந்தியா

கர்நாடக அதிருப்தி எம்எல்ஏக்கள் வழக்கு - நாளை காலை 10.30.மணிக்கு தீர்ப்பு

கர்நாடக சபாநாயகருக்கு எதிராக அதிருப்தி எம்எல்ஏக்கள் தொடர்ந்த வழக்கில் நாளை காலை பத்தரை மணியளவில் தீர்ப்பு வழங்கப்படும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தந்தி டிவி

கர்நாடக அதிருப்தி எம்எல்ஏக்கள், சபாநாயகருக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு விசாரணையில், காலை முதல் அதிருப்தி எம்.எல்.ஏக்கள் தரப்பு, சபாநாயகர் தரப்பு, கர்நாடக முதல்வர் குமாரசாமி தரப்பினர் பரபரப்பாக வாதிட்டனர். உணவு இடைவேளைக்கு பிறகு நடத்தப்பட்ட வாதத்தில், கர்நாடகா எம் எல் ஏகள் விவகாரத்தில் இரண்டு பக்கமும் நியாயம் உள்ளதாகவும் எனவே, இரண்டு தரப்புக்கு பாதகமில்லாத உத்தரவை தான் பிறப்பிப்போம் என, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கூறினார். அப்போது, சபாநாயகர் தரப்பு வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி, சபாநாயகருக்கு நீதிமன்றங்கள் உத்தரவு பிறப்பிக்க முடியாது என்பது தான் சட்டமாக உள்ளதாக சுட்டிக்காட்டினார். இதனை தொடர்ந்து வாதிட்ட கர்நாடக முதல்வர் குமாரசாமி தரப்பு வழக்கறிஞர் சபாநாயகர் எடுக்கும் முடிவு சட்டத்திற்குப் புறம்பானதாக இருக்கும் பட்சத்தில் தான் உச்ச நீதிமன்றம் தலையிட முடியுமே தவிர சபாநாயகரின் அதிகாரத்தில் தலையிட முடியாது என வாதிட்டார். அனைத்து தரப்பினரின் வாதத்தை கேட்ட தலைமை நீதிபதி, இந்த வழக்கில் நாளை காலை பத்தரை மணிக்கு, தீர்ப்பு வழங்கப்படும் என உத்தரவு பிறப்பித்தார்.

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்

CM Vijay | தமிழகத்தின் பவர்ஃபுல் சிங்கங்களுக்கு நடுவே சாந்தமாய் சிரித்த முகத்தோடு CM விஜய்

CM Vijay | புல்லட்டில் பாய்ந்த சிங்கப்பெண் - களத்தில் தீயாய் ஆக்சனில் வியக்கவிட்ட காவல் தெய்வங்கள்

BREAKING || தமிழகத்தில் 5 தொகுதி இடைத்தேர்தல் எப்போது? - ஐகோர்ட் வைத்த அடுத்த செக்