சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில் கைது செய்து சிறையில் உள்ள ரகு கணேஷின் நீதிமன்ற காவலை காணொலி காட்சி வாயிலாக ஆஜர் செய்யாமல் நீட்டிப்பு செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்தார். அந்த மனுவில் உயர் நீதிமன்றம் காவல் நீட்டிப்பு உத்தரவு அடிப்படை உரிமைக்கு எதிராக உள்ளதால், தடை விதிக்க வேண்டும் என வாதிட்டார். இதற்கு நீதிபதிகள், நீதிமன்ற காவல் காலம் நிறைவடைந்துவிட்டதால், மேல்முறையீடு மனுவை விசாரணைக்கு ஏற்க முடியாது என தெரிவித்தனர்.