இந்தியா

"உங்க நம்பர் தாங்க" - சல்மான் கானை கருவறுக்க துடிக்கும் கேங்க்ஸ்டருக்கு தூதுவிட்ட Ex காதலி

தந்தி டிவி

"உங்க நம்பர் தாங்க" - சல்மான் கானை கருவறுக்க துடிக்கும் கேங்க்ஸ்டருக்கு தூதுவிட்ட Ex காதலி

சல்மான் கானின் முன்னாள் காதலியும் நடிகையுமான சோமி அலி, தற்போது குஜராத்தின் சபர்மதி சிறையில் அடைக்கப்பட்டுள்ள கேங்க்ஸ்டர் லாரன்ஸ் பிஷ்னோயிடம் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது... சல்மான் கானுக்கு நெருக்கமானவர்கள் அனைவருக்கும் பிஷ்னோய் கும்பல் மிரட்டல் விடுத்துள்ள நிலையில், ஜூம் கால் மூலமாக பிஷ்னோயுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக உள்ளதாக சோமி அலி சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.. "நமஸ்தே, லாரன்ஸ் பாய்... ஜெயிலில் இருந்தும் நீங்கள் ஜூம் காலில் பேசுவீர்கள் என கேள்விப்பட்டுள்ளேன்...அதனால் உங்களுடன் சில விஷயங்களை பேச விரும்புகிறேன்...எப்படிப் பேசலாம் என நீங்களே சொல்லுங்கள்.." என குறிப்பிட்டுள்ள சோமி அலி, உலகில் எனக்கு மிகவும் பிடித்த இடம் ராஜஸ்தான்...அங்கு உங்கள் கோவிலுக்குச் சென்று பிரார்த்தனை செய்ய விரும்புகிறேன்...ஆனால் அதற்கு முன் உங்களிடம் பேச வேண்டும்...நம்பி உங்கள் நம்பரைத் தாருங்கள்..." என்று வெளிப்படையாகவே கோரிக்கை வைத்துள்ளார்... சோமி அலியும், சல்மான் கானும் 1990களில் காதலித்து வந்த நிலையில், பிறகு இருவரும் பிரிந்தனர்... சல்மான் தன்னை அடித்துத் துன்புறுத்தியதாக சோமி அலி குற்றம் சாட்டி இருந்தார்... அதை சல்மான் மறுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு