இந்தியா

நியாய விலை கடையில் பாடம் பயிலும் அங்கன்வாடி குழந்தைகள்

சேலத்தில் பள்ளி குழந்தைகளுக்காக கட்டப்பட்ட அங்கன்வாடி மற்றும் நூலக கட்டிடங்களில் தமிழக அரசு ஆர்ஓ வாட்டர் விநியோகிக்கும் இடமாக மாற்றி வருகிறது

தந்தி டிவி

நியாய விலை கடையில் பாடம் பயிலும் அங்கன்வாடி குழந்தைகள்

சேலம் மாவட்டம் சன்னியாசிகுண்டு பாத்திமா நகர் பகுதியில் கடந்த 2014 ஆம் ஆண்டு ஏழை மாணவர்கள் பயன்பெறும் விதமாக அங்கன்வாடி கட்டடம் கட்டப்பட்டது. அங்கே இருபதற்கும் மேற்பட்ட குழந்தைகள் பயின்று வருகின்றனர். கட்டடத்தின் ஒரு அறையில் பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்வதற்காக ஆர்.ஓ வாட்டர் இயந்திரங்கள் பொருத்தப்பட்டுள்ளது.

இதனால் அங்கு படிக்கும் குழந்தைகளை, நியாயவிலை கடை கட்டிடத்தில் அமரவைக்கப்பட்டுள்ளனர். குறுகலான சமையலறையில் குழந்தைகள் அமர்ந்து உணவு சாப்பிடும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதே போன்று கடந்த 2009 ஆம் ஆண்டு கட்டப்பட்ட அரசு நூலகம் இதுவரை மாணவர்களின் பயன்பாட்டிற்கு வரவில்லை.. , முதியோர்களுக்கு உதவித்தொகை வழங்கும் இடமாக முன்னர் நூலகம் பயன்படுத்தப்பட்டு வந்தது,. இப்போது ஆர் ஓ வாட்டர் விற்பனை செய்யும் இடமாக செயல்பட்டு வருகிறது.

அரசு அங்கன்வாடி கட்டடம் மற்றும் நூலகங்களை மீட்டெடுத்து ஏழை எளிய குழந்தைகள் மற்றும் மாணவர்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி