இந்தியா

ஜம்மு - காஷ்மீரில் உள்ள தமிழக மாணவர்களின் பாதுகாப்பு? -அரசு விளக்கம்

தந்தி டிவி

ஜம்மு - காஷ்மீரில் உள்ள தமிழக மாணவர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அரசு விளக்கம் அளித்துள்ளது. ஜம்மு- காஷ்மீரில் போர் பதற்றம் நிலவி வரும் நிலையில், அங்கு பயின்று வரும் தமிழக மாணர்வகளை மீட்டு வரவேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது. இது குறித்த நடவடிக்கைக்கு, புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அப்தாப் ரசூல் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், ஜம்மு - காஷ்மீர் மாநில அரசுடன் பேசி 52 மாணவர்களின் பாதுகாப்பும் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஜம்மு-காஷ்மீரில் தற்போது விமான சேவை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளதால், மாணவர்களை சாலை வழியாக அழைத்து வருவதற்கான சூழல் இல்லை என்றும், 52 மாணவர்களையும் தமிழ்நாட்டிற்கு அழைத்து வர உரிய நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

🔴LIVE : PM Modi | Nagercoil | Roadshow | நாகர்கோவிலில் பிரதமர் மோடி ரோடு ஷோ

🔴LIVE : TVK | vijay | தி நகரில் விஜய் ரோடு ஷோ

TVK | Vijay | பரிவாரங்களுடன் கிளம்பிய விஜய்.. வழியெங்கும் பூத்தூவி வரவேற்பு - திணறும்சென்னை Traffic

🔴LIVE: விஜய் பிரசாரகூட்டத்தில்

TVK | Vijay |புறப்பட்டார் விஜய்...வெளியே வந்ததும் சூழ்ந்த தொண்டர்கள் -அதிரும் சென்னையின் ஹாட் ஸ்பாட்