இந்தியா

சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு - புதிய மேல்சாந்திகள் தேர்வு

கொரோனா ஊரடங்குக்குப் பின் சபரிமலை ஐயப்பன் கோயில் நடை, இன்று திறக்கப்பட்டுள்ளது.

தந்தி டிவி

கேரள மாநிலத்தின் புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில், கொரோனா ஊரடங்கு தளர்வுக்குப்பின் இன்று நடை திறக்கப்பட்டுள்ளது. நாள்தோறும் முன்பதிவு செய்த 250 பக்தர்கள் மட்டுமே ஐயப்பனை தரிசிக்க அனுமதிக்கப்படுகின்றனர். இதற்கிடையே, சபரிமலை மற்றும் மாளிகைபுரம் கோயில்களின் மேல்சாந்திகள் பதவிக்காலம் முடிந்த நிலையில், புதிய மேல்சாந்தி தேர்வும் நடந்து முடிந்துள்ளது.

இதற்கான நேர்காணல், அக்டோபர் 5, 6 தேதிகளில் திருவனந்தபுரம் தேவசம்போர்டு தலைமையகத்தில் நடந்தது. இதில் தேர்வு செய்யப்பட்டவர்களில், புதிய மேல்சாந்திகள் இன்று காலை 8 மணிக்கு குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டனர். இதன்படி, ஏற்கனவே மாளிகைபுரம் மேல்சாந்தியாக இருந்த ஜெயராஜ் பொட்டி, சபரிமலை மேல்சாந்தியாகவும், அங்கமாலியைச் சேர்ந்த ரெஜிகுமார் மாளிகைபுரம் மேல்சாந்தியாகவும் தேர்வாகியுள்ளனர்.

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு

Chennai Corporation New Rules | சென்னையில் அமலுக்கு வந்தது புதிய ரூல்ஸ்

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு