இந்தியா

போலீஸார் மீது நாட்டு வெடிகுண்டு வீச்சு - ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் 3 பேர் கைது

சபரிமலை சன்னிதானத்திற்குள் பெண்கள் அனுமதிக்கப்பட்ட சம்பவத்திற்கு கேரளாவில் எதிர்ப்பு வலுத்து வருகிறது.

தந்தி டிவி
சபரிமலை சன்னிதானத்திற்குள் பெண்கள் அனுமதிக்கப்பட்ட சம்பவத்திற்கு கேரளாவில் எதிர்ப்பு வலுத்து வருகிறது. இதனைக் கண்டித்து, பாஜக மற்றும் சபரிமலை கர்ம சமிதி சங்கம் சார்பில் பல்வேறு பகுதிகளில் தொடர் போராட்டங்கள் நடந்தன. இதனால் பரபரப்பான சூழல்நிலை ஏற்பட்டது. இந்நிலையில், திருவனந்தபுரம் அருகே நெடுமான்காடு பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்ட ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள், திடீரென பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீஸார் மீது நாட்டு வெடிகுண்டுகளை வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதில் போலீஸார் சிலருக்கு காயம் ஏற்பட்டது. இதையடுத்து 3 பேரைக் கைது செய்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்