இந்தியா

நாளை மறுநாள் சபரிமலை நடை திறப்பு : பக்தர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிப்பு

நாளை மறுநாள் சபரிமலை நடை திறக்கவுள்ள நிலையில், பக்தர்கள் உணவு, குடிநீருடன் வருவது உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

தந்தி டிவி
கேரள மாநிலத்தில் பெய்த கன மழை மற்றும் வெள்ளப் பெருக்கால், பம்பை நதி உருக்குலைந்தது. இதனால், சபரிமலையில் நடைபெற்ற நிறை புத்தரிசி, ஆவணி மாத பூஜை மற்றும் திருவோண பூஜைகளுக்கு, பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. இந்நிலையில், புரட்டாசி பூஜைக்கு பக்தர்கள் தயாராகி வருகின்றனர். முழுமையாக சீரமைப்பு பணிகள் நிறைவடையாத நிலையில், பக்தர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. உணவு - குடிநீர் கொண்டு வர வேண்டும், காடுகளுக்குள் செல்லக் கூடாது, புதை குழிகள் உள்ளதால் அனுமதிக்கப்படாத இடங்களுக்கு போக கூடாது என்பன உள்ளிட்ட கட்டுப்பாடுகளை தேவசம்போர்டு அமல்படுத்தியுள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்