சபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் விவகாரத்தில் புதிய கேள்விகளுடன் மறு ஆய்வு மனுவை பெரிய அமர்வுக்கு பரிந்துரைக்க முடியுமா என்பது தொடர்பாக தலைமை நீதிபதி எஸ்.ஏ. போப்டே, உடன் ஆர். பானுமதி, அசோக் பூஷண், உள்ளிட்ட 9 நீதிபதிகள் அடங்கிய அமர்வு விசாரித்தது. விசாரணைக்கு பின்னர், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ. போப்டே உத்தரவு ஒன்றை பிறப்பித்தார். அந்த உத்தரவில், மத சுதந்திரத்துக்கான நோக்கமும், எல்லையும் என்ன? மதத்தின் கட்டுப்பாடுகள் வழிபாட்டு முறைகளுடன் தொடர்புடைய விஷயமா? அரசியலமைப்பு சட்டம் 25 மற்றும் 26 பிரிவுகளில் கொடுக்கப்பட்டுள்ள மத ரீதியான உரிமைகள் என்ன? என்பது உள்ளிட்ட 7 கேள்விகளை, விசாரிக்கப் போவதாக உச்சநீதிமன்றம் உறுதிபடுத்தியுள்ளது. மேலும் சபரிமலை மறுஆய்வு மனு மீதான விசாரணை வரும் 17-ஆம் தேதி முதல் நடைபெறும் எனவும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
---