மாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டதையடுத்து அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்நிலையில், மாசி மாத பூஜையில் இளம்பெண்கள் சபரிமலைக்கு அழைத்து செல்லப்படுவார்கள் என்று நவோதன கேரளா என்ற சமூகவலைதள பக்கத்தில் சிலர் பதிவிட்டுள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், இளம் பெண்கள் சபரிமலைக்கு வந்தால் அவர்களை தடுப்போம் என்று சங்பரிவர் அமைப்பு தெரிவித்துள்ளது. இதனால் மீண்டும் கேரளாவில் பரபரப்பு நிலவி வருகிறது.