சபரிமலையில் அரவணை, அப்பம் பிரசாதத்தில் ரூ.8.8 லட்சம் முறைகேடு! சபரிமலை ஐயப்பன் கோயிலில் கெட்டுப்போகாத அரவணை மற்றும் அப்ப பிரசாதங்களை சேதமடைந்ததாக போலி கணக்கு காட்டி, 8.8 லட்ச ரூபாய் அளவுக்கு முறைகேடு நடந்துள்ளதாக கேரள உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கடந்த மண்டல-மகரவிளக்கு காலத்தில் பிரசாத தட்டுப்பாடு நிலவியபோதே அரவணை, அப்ப பிரசாத மோசடி நடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கெட்டுப்போனதாகக் கணக்கு காட்டப்பட்டு அழிக்கப்பட்ட 7,594 அரவணை டின்கள் மற்றும் 2,697 அப்ப பாக்கெட்டுகள் ஆய்வின்போது கிடைக்கவில்லை என தேவஸ்வம் விஜிலென்ஸ் தெரிவித்துள்ளது. மேலும், சில குறிப்பிட்ட நபர்களுக்கு பிரசாதங்களை இலவசமாக வழங்கிவிட்டு, அவற்றைச் சேதமடைந்த கணக்கில் காட்டியுள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சபரிமலை தேவஸ்வம் சிறப்பு கமிஷனர் தாக்கல் செய்த அறிக்கையின் அடிப்படையில் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
#sabarimala #aravana #appam #thanthitv