பிரதமர், குடியரசுத் தலைவர் ஆகியோரின் புகைப்படங்களை, வர்த்தக விளம்பரங்களுக்கு பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்க, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இது தொடர்பாக நுகர்வோர் விவகார அமைச்சகத்தின் முன்வரைவில், முதற்கட்டமாக ஒரு லட்சம் ரூபாய் அபராதமும், மறுமுறை தவறு செய்தால் 5 லட்சம் ரூபாய் வரை அபராதத்துடன் 6 மாத சிறைத் தண்டனை விதிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் தேசியக் கொடி, அசோக சக்கரம், நாடாளுமன்ற முத்திரை, உச்சநீதிமன்ற முத்திரை ஆகியவற்றை தவறாக பயன்படுத்துவோர் மீது 500 ரூபாய் மட்டுமே அபராதம் விதிக்கப்பட்டது, குறிப்பிடத்தக்கது.