இந்தியா

காலதாமதத்தால் மத்திய அரசின் திட்டங்களுக்கான நிகர செலவு அதிகரிப்பு - இந்திய ரிசர்வ் வங்கி

காலதாமதத்தால் மத்திய அரசின் திட்டங்களுக்கான நிகர செலவு அதிகரித்து உள்ளதாக இந்திய ரிசர்வ் வங்கி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தந்தி டிவி

ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள ஆண்டறிக்கையில், கடந்த மார்ச் மாதம் வரையில் 254 திட்டங்களுக்கான திட்ட மதிப்பீடு 5 புள்ளி 88 லட்சம் கோடி ரூபாயில் இருந்து 7 புள்ளி 27 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

திட்டமிட்ட தேதிக்குள் இவற்றை முடிக்காததே ஒரு லட்சத்து 38 ஆயிரம் கோடி ரூபாய் திட்ட செலவு அதிகரிக்க காரணம் என கூறப்பட்டுள்ளது.

இதில் ரயில்வே துறையில் 29 திட்டங்களுக்கான செலவு 71 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கும், மின்துறையில் 62 திட்டங்களுக்கான செலவு 46 ஆயிரத்து 591 கோடி ரூபாய் அளவுக்கும் அதிகரித்துள்ளது.

பெட்ரோலியத் துறையில் 27 திட்டங்களுக்கான செலவு 3 ஆயிரத்து 524 கோடி ரூபாயும், தரைவழி போக்குவரத்து துறையில் 58 திட்டங்களுக்கான செலவு 2 ஆயிரத்து 522 கோடி ரூபாய் அளவுக்கு செலவு அதிகரித்துள்ளதாக அதில் சுட்டிக்காட்டப்பட்டு உள்ளது.

விதிவிலக்காக இரும்பு உற்பத்தி துறையில், 15 திட்டங்களுக்கான செலவு 2 புள்ளி 12 கோடி ரூபாய் அளவுக்கு குறைந்துள்ளது. திட்டங்களை குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்க வேண்டிய அவசியம், ரிசர்வ் வங்கியின் அறிக்கை மூலம் தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது.

Breaking | TN Election 2026 | பிப்ரவரி 17.. | தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்