இந்தியா

அகில இந்திய உயர்கல்வி ஆய்வின் அறிக்கை - மத்திய கல்வி அமைச்சர் அனுமதியுடன் வெளியீடு

மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அனுமதியுடன், 2019 - 20ஆம் ஆண்டுக்கான அகில இந்திய உயர்கல்வி ஆய்வின் அறிக்கை வெளியாகி உள்ளது.

தந்தி டிவி

அகில இந்திய உயர்கல்வி ஆய்வின் அறிக்கை - மத்திய கல்வி அமைச்சர் அனுமதியுடன் வெளியீடு

மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அனுமதியுடன், 2019 - 20ஆம் ஆண்டுக்கான அகில இந்திய உயர்கல்வி ஆய்வின் அறிக்கை வெளியாகி உள்ளது.நாட்டில் உயர்கல்வியின் தற்போதைய நிலவரம் மீதான முக்கிய செயல்திறன் குறியீடுகள் இடம்பெற்றுள்ள இந்த அறிக்கையின்படி,கடந்த ஐந்து ஆண்டுகளில் மாணவர்களின் சேர்க்கை 11.4% வளர்ச்சியடைந்திருப்பதாகவும்,இந்தக் காலகட்டத்தில் உயர்கல்வியில் சேர்ந்த மாணவிகளின் எண்ணிக்கை 18 புள்ளி 2 சதவீதம் அதிகரித்ததாகவும் அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.ஒட்டுமொத்த உயர்கல்வி சேர்க்கை விகிதம் 2014 - 15ஆம் ஆண்டில் 24 புள்ளி 3 சதவீதமாக இருந்ததாகவும், 2019 - 20ஆம் ஆண்டில் 27 புள்ளி 1 சதவீதமாக அதிகரித்துள்ளதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.2014 - 15 ஆம் ஆண்டில் மொத்த மாணவர்கள் எண்ணிக்கை 3 கோடியே 42 லட்சமாகவும், 2019-20ஆம் ஆண்டில் 3 கோடியே 85 லட்சமாகவும் அதிகரித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. குறிப்பாக முனைவர் பட்டப்படிப்பு பயிலும் மாணவர்கள் எண்ணிக்கை 2014-15ஆம் ஆண்டில் ஒரு லட்சத்து 17 ஆயிரமாக இருந்த நிலையில், 2019-20ம் ஆண்டில் அது 2 லட்சத்து 3 ஆயிரமாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்