உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள பனாரஸ் இந்து பல்கலைகழகத்தின் பேராசிரியராக, நீதா அம்பானி, நியமிக்கப்பட உள்ளதாக வெளியான தகவலில் உண்மையில்லை என, ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. இது குறித்து அந்த நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், இது குறித்து எந்த ஒரு அழைப்பும் அந்த பல்கலைகழகத்திடம் இருந்து வரவில்லை என்றும் ரிலையன்ஸ் நிறுவனம் கூறியுள்ளது.