இந்தியா

செம்மர கடத்தல்கார‌ர்களுக்கும் போலீசாருக்கும் இடையே மோதல் : தமிழகத்தை சேர்ந்தவர் உயிரிழப்பு

ஆந்திர மாநிலத்தில் போலீசாருக்கும் செம்மரக்கடத்தல்கார‌ர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் தமிழகத்தை சேர்ந்த ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

தந்தி டிவி
நேற்று இரவு காளஹாஸ்தி வனப்பகுதியில் ஆந்திர போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது சிலர் செம்மர கடத்தலில் ஈடுபட்டதாக தெரிகிறது. போலீசார் அவர்களை பிடிக்கு முயன்றபோது, அந்த கும்பல் போலீசார் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இதில், மூன்று போலீசார் காயமடைந்துள்ளனர். இதனால் போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். இதில் திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த காமராஜ் என்பவர் உயிரிழந்துள்ளார். மேலும் ஒருவர் கைது செய்த போலீசார் தப்பியோடிய கடத்தல்கார‌ர்களை தேடி வருகின்றனர். கடந்த ஆறு ஆண்டுகளில் செம்மரம் கடத்தல் சம்பவங்களில் தொடர்புடையதாக கூறி 31 பேர் என்கவுன்டரில் கொல்லப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு