இந்திய கடலோர காவல்படையில் 21 ஆண்டுகள் சேவையாற்றிய ரஸியா சுல்தானா(Raziya Sultana) என்ற கப்பல் ஓய்வு பெற்றது. ஒடிசாவின் பாரதீப் துறைமுகத்தில் நடைபெற்ற விழாவில் கடலோர காவல்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையுடன் இந்த கப்பல் பணியில் இருந்து விலக்கி கொள்ளப்பட்டது. டெல்லியை ஆண்ட சுல்தான் பேரரசின் முதல் பெண் ராணியான ரஸியாவின் பெயர் இந்த கப்பலுக்கு இடப்பட்டது குறிப்பிடத்தக்கது.