இந்தியா

இன்று கேரள சட்டப்பேரவை வைர விழா - திருவனந்தபுரம் சென்ற குடியரசு தலைவருக்கு உற்சாக வரவேற்பு

கேரள மாநிலத்தில் இன்றும், நாளையும், நடைபெற உள்ள நிகழ்ச்சியில் பங்கேற்க சென்னையில் இருந்து நேற்றிரவு விமானம் மூலம் திருவனந்தபுரம் சென்ற குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

தந்தி டிவி

கேரள மாநிலத்தில் இன்றும், நாளையும், நடைபெற உள்ள நிகழ்ச்சியில் பங்கேற்க சென்னையில் இருந்து நேற்றிரவு விமானம் மூலம் திருவனந்தபுரம் சென்ற குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ஆளுநர் சதாசிவம்,முதலமைச்சர் பினராயி விஜயன் மற்றும் அமைச்சர்கள் வரவேற்றனர். இன்று காலை நடைபெறும் சட்டப்பேரவை வைர விழாவில் பங்கேற்ற பின் மாலை கொச்சி செல்லும் குடியரசுத் தலைவர் நாளை திருச்சூர் தனியார் கல்லூரி விழாவில் பங்கேற்கிறார். இதனைத் தொடர்ந்து குருவாயூர் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்கிறார். பின்னர் அங்கிருந்து மாலை தனி விமானம் மூலம் குடியரசு தலைவர் டெல்லி செல்கிறார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்