தலைநகர் டெல்லியில் உள்ள ஜூம்மா மசூதியில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் குவிந்தனர். கூட்டு பிராத்தனையில் கலந்து கொண்ட இஸ்லாமியர்கள் ஒருவருக்கொருவர் ஈகை திருநாள் வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டனர். இதேபோல் ஜம்மு-காஷ்மீர் மாநில தலைநகர் ஸ்ரீநகரில் நடந்த ஈகை திருநாள் கூட்டு பிரார்த்தனையில் திரளான இஸ்லாமியர்கள் பங்கேற்று நமாஸ் செய்தனர். இதேபோல் மகாராஷ்டிரா தலைநகர் மும்பையில், கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் இஸ்லாமியர்கள் மரினா மஸ்ஜித்தில் தொழுகை நடத்தினர். பின்னர் ஒருவருக்கொருவர் கட்டித்தழுவி ஈகை திருநாள் வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டனர்.